puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

புதன், 12 செப்டம்பர், 2012

புதிய ப்ளாக்கர் பதிவர்களுக்கான சில பயணுள்ள தகவல்கள்-Tips For New Bloggers


புதிய ப்ளாக்கர் பதிவர்களுக்கான சில பயணுள்ள தகவல்கள்-Tips For New Bloggers

ப்ளாக்கர் சில பயணுள்ள தகவல்கள் -Blogger Tips


டேய்!!! நீயே இங்க ப்ளாக் எழுத ஆரம்பிச்சு இரண்டு மாசம் 12 நாள்தான் ஆகுது.அதுக்குள்ள புதிய பதிவர்களுக்கு டிப்ஸ் கொடுக்குறியா...இப்டிதானே நினைக்கிறீங்க??? சரி விடுங்க பாஸ்... இன்னிக்கு புதுசா வேலைக்கு சேர்ந்தா நாளைக்கு இன்னுமா புதுசு ”நீ”ன்னு கேட்பாங்க பாஸ்.. இதான் உலகம்...

நாங்களாம் எழுதின உடனே பிடிக்காது ..எழுத எழுததான் பிடிக்கும்.
சரி விசயத்துக்கு வருவோம். புதிய பதிவரா நீங்கள்?ப்ளாக் ஆரம்பிச்சிட்டு எப்டி நம்ம வலைப்பூவை இன்னும் அழகா,சிறப்பாக்கலாம்னு யோசிக்கிறீங்களா?இதோ இது முழுக்க உங்களுக்கான பதிவுதான்.

ப்ளாக்கர்களுக்காவே சேவையில் இயங்கும் சில வலைத்தளங்கள்:

இந்த வலைத்தளங்கள் எல்லாமே நான் பார்த்ததில் சிறப்பானவை மட்டுமே. இந்த தளங்களில் பதிவர்களுக்கு தேவையான அனைத்து விட்ஜெட்,ப்ளாக்கர் டிப்ஸ்,ப்ளாக்கர் டெம்ப்ளேட்,ஜாவா ஸ்க்ரிப்ட் என இன்னும் ஏராளம் உண்டு.

1.SPICEUPYOURBLOG
2.ABUFARHAN.COM 
3.BLOGDOCTOR 
4.BLOGGERPLUGGINS 
5.TIPS FOR NEW BLOGGERS 
6.BLOGGER TIPS AND TRICKS 
7.PROBLOGGER 
8.MASHABLE 
9.BLOGGERMINT 
10.BLOGGER STOP

ப்ளாக்கர் டெம்ப்ளேட் வழங்கும் சில தளங்கள்:


1.DELUXE TEMPLATES 
மேலே உள்ள இலவசமாக டெம்ப்ளேட் கொடுக்கும் Custom blogger template களை உபயோகப்படுத்துவதில் சில பிரச்சினைகள் உள்ளது.

1.Google Bot ஆல் சரியாக சுலபமாக உங்கள் தளத்தை புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்.

2.டெம்ப்ளெட்டை எதாவது மாற்றம் செய்ய விரும்பும்போது சில பிரச்சினைகள் வரலாம்.

அதோடு உங்களுக்கு XHTML பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்.ஆதலால் ப்ளாக்கர் வழங்கும் default classic template களை உபயோகிப்பது பிரச்சினையே இல்லாதது.அப்படி இல்லாவிட்டால் கீழ் உள்ள டைனமிக் டெம்ப்ளேட் உபயோகிக்கலாம்.

Dynamic View Google New Blogger Template

சில தினங்களுக்கு முன் கூகிள் டைனமிக் ப்ளாக்கர் டெம்ப்ளேட்களை வெளியிட்டது.இதுவும் சிறப்பாகவே இருக்கிறது.இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கு சொடுக்கி பாருங்கள் 

புதிய பதிவர்களுக்கான அடிப்படை HTML CODES-Basic Html Codes For Beginners

புதிய பதிவர்கள் அனைவரும் அடிப்படை HTML கோட்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.இணைப்பு கொடுப்பது,புகைப்படத்தை பதிவிடுவது,காணொளிகளை பதிவிடுவது பற்றி பார்ப்போம்.முதலில் இணைப்பு 

இணைப்பு-Links

ப்ளாக்கர் கம்போஸ் மோடில் இணைப்பு இருந்தாலும் சில attribute இருக்காது.அது எப்படி என்று பார்ப்போம். 


<a href="http://www.mazhai.net/2011/07/blog-post_25.html"target="blank">ப்ளாக்கரில் இசையை பதிவிடுவது எப்படி?</a>

மேல் உள்ள கோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும்.

ப்ளாக்கரில் இசையை பதிவிடுவது எப்படி?

1.மேலே வெள்ளை நிறத்தில் உள்ள http://www.mazhai.net/2011/07/blog-post_25.html என்பதற்கு பதிலாக நீங்கள் இணைப்பு கொடுக்கவிருக்கும் தளத்தின் பெயர்.

2. target=blank என்பது உங்கள் தளத்தை விட்டு வெளியேறிவிடாமல் இணைப்பானது புதிய Tab இல் திறக்கும்.இது மிக முக்கியமான ஒன்று.தேவையில்லையெனில் target=blank என்பதை நீக்கிவிடலாம்

3.ப்ளாக்கரில் இசையை பதிவிடுவது எப்படி? என்ற இடத்தில் நீங்கள் கொடுக்கும் இணைப்பு பற்றி உங்கள் விருப்பம்போல் எழுதிக்கொள்ளலாம்.

புகைப்படங்கள்-Images

க்ளிக் செய்ய முடியாத(Unclickable images) தேவையான அளவு நீள அகலத்துடன் புகைப்படத்தை பதிவது எப்படி?


<img src="http://lh3.ggpht.com/mendes1961/SP-eOllhdYI/AAAAAAAAPZM/6VUkZKqsPEo/s800/17934.png" width="50" height="80">

மேல் உள்ள கோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும்

  

இதில் வெள்ளை நிறத்தில் உள்ள (URL OF THE  IMAGE)இடத்தில் நீங்கள் அப்லோட் செய்த உங்கள் புகைப்படத்தின் முகவரி பிறகு நீளம்,அகலம்(width,height) ஆகியவற்றை உங்களுக்கு தேவையான அளவு மாற்றிக்கொள்ளலாம்.

காணொளிகள்-Videos

தேவையான நீள அகலத்துடன் காணொளிகளை பதிவிடுவது எப்படி?

1. நீ குழாய்க்கு(you tube) செல்லுங்கள்.

2.அதில் வீடியோவின் கீழே இருக்கும் share என்பதை க்ளிக் செய்யுங்கள்.அதில் வரும் embed என்பதை க்ளிக் செய்தால் அதன் கீழே தேவையான நீள அகலம் இருக்கும்.அதை கிளுக்கினால் உங்களுக்கு தேவையான் கோட்கள் பாக்ஸில் வரும் அதை அப்படியே இங்கு காப்பி செய்து பேஸ்ட் செய்து பதியலாம்.(html mode) அல்லது Manual ஆகவும் நீள அகலத்தை மாற்றிக்கொள்ளலாம்.அந்த கோட்களில் இருக்கும் width=450 height=400 என்பதற்கு பதிலாக நீங்கள் பதிவிட விரும்பும் நீள அகலமாக மாற்றிக்கொள்ளலாம்.

மேலும் சந்தேகம் எதுவும் இருந்தால் தயங்காமல் கேளுங்கள். நன்றி மீண்டும் சந்திப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக