puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

சனி, 8 செப்டம்பர், 2012

c, c++, Php இயக்க பயன்படும் இணையதளம்


c, c++, Php இயக்க பயன்படும் இணையதளம்

online compiler-interpreter

வணக்கம் நண்பர்களே..!

கணினி மொழிகளைக் கற்றுத் தேர்ந்து, அதில் புரோகிராம் எழுத நினைப்பவர்களுக்கு பெரும் தடையாக வந்தமைவது அவற்றை இயக்கிப் பார்ப்பதற்கான மென்பொருள் இல்லாததுதான்.

உதாரணமாக PHP எழுதி நிரல்களை இயக்கிப்ப்பார்ப்பதற்கு அதற்குரிய மென்பொருள் நம் கணினியில் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். அவ்வாறில்லாமல் இணையத்தைப் பயன்படுத்தி நிரல்களை எழுதி சோதனை செய்ய இந்த தளம் உங்களுக்குப் பயன்படும்.

உங்கள் கணினி மட்டுமல்லாமல், நீங்கள் இணையத்தைப் பயன்படுத்திவரும் எந்த ஒரு கணனியிலும் மென்பொருள்கள் இல்லாமலே C, C++, PHP போன்றவைகளில் புரோகிராம் எழுதி அவற்றை இயக்கிப் பார்க்க முடியும்.

இதற்கு உதவும் தளம் http://codepad.org

இந்த தளத்திற்கு சென்று இதில் உள்ள ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்துகொண்டு நீங்கள் நிரல்வரிகளை தட்டச்சிட்டு சப்மிட் என்ற பொத்தானை அமுக்குவதன் மூலம் உங்கள் நிரல்வரிகளுக்குரிய முடிவுகளைப் பெறலாம்.

C, C++, PHP மட்டுமல்ல... C
C++
D
Haskell
Lua
OCaml
PHP
Perl
Plain Text
Python
Ruby
Scheme
Tcl ஆகிய மொழிகளை இதில் உள்ளிட்டு உங்கள் கற்கும் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

எந்த ஒரு மென்பொருள் கணனியில் நிறுவாமலேயே இந்த சேவையை இலவசமாக நாம் பெற முடியும் என்பதுதான் இத்தளத்தின் சிறப்பு.  இந்த தகவல் கணினி மொழி கற்பவர்களுக்கும், கற்றுத் தேர்ந்தவர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கு இப்பதிவை பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி நண்பர்களே.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக