லேப்டாப்புகளின் பேட்டரியை பராமரிப்பதற்க்கான வழிமுறைகளை இங்கே
காணலாம்.
1. அதிக பேட்டரி பேக்கப்புக்கு..
லேப்டாப்பின் திரைக்குதான் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே கரண்ட் இல்லாமல் பேட்டரியில் லேப்டாப்பை இயக்கும்போது அதன் திரையின் பிரகாசத்தை குறைத்து வைத்துக்கொள்வது அதிக மின்சாரத்தை சேமிக்க முடியும்.
அதுபோல் லேப்டாப் ஸ்டான்பை மோடில் வைத்திருக்கும்போது, ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற இணைப்புகள் மற்றும் யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவ்கள் போன்ற இணைப்புகளை துண்டித்துவிடுவது நல்லது. மின் சிக்கனம் மட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.
2.எப்போது சார்ஜ் செய்ய வேண்டும்..
நீண்ட நேரம் தொடர்ந்து லேப்டாப்பின் பேட்டரியை சார்ஜில் வைக்கக் கூடாது.
குறிப்பாக பேட்டரி 15%க்கும் குறைவான சார்ஜ் இருக்கும் போது மட்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். குறிப்பாக பேட்டரி முழு சார்ஜில் இருக்கும் போது அதை மீண்டும் சார்ஜில் வைத்தால் பேட்டரி மிக விரைவாக பலவீனமாகிவிடும்.
3.சார்ஜ் ஆகும்போது பேட்டரியை பொசுக்குன்னு கழற்றாதீங்க..
லேப்டாப் மின் இணைப்பில் இருக்கும் போது அதன் பேட்டரியை அகற்ற வேண்டாம்.
அதுபோல் பேட்டரி இல்லாமல் நீண்ட நேரம் லேப்டாப்பை மின் இணைப்பில் வைத்து இயக்க வேண்டாம். பேட்டரியை ரிசார்ஜ் செய்வது நல்லது.
4. பேட்டரியை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருத்தல்:
ஒரு வாரத்துக்கு மேல் லேப்டாப்பில் வேலை இல்லை என்று தெரிந்தால் அல்லது துணை பேட்டரி இருந்தால் பேட்டரியின் சார்ஜ் அளவை 50%க்கும் குறைவாக வைத்து அதை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது.
அதுபோல் லேப்டாப்பை நீண்ட நேரம் காரில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அதிக நேரம் லைப்டாப்பை காரில் வைத்திருந்தால் விரைவில் லேப்டாப் சூடாகிவிடும்.
5. பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றுதல் மற்றும் குறைத்தல்:
பொதுவாக எல்லா லேப்டாப்புகளும் லித்தியம் பேட்டரிகளைக் கொண்டுள்ளன. எனவே பேட்டரியின் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் அதை முறையாக முழு சார்ஜில் வைத்திருப்பது, மற்றும் அதன் சார்ஜை 40 முதல் 50 சதவீதத்திற்கும் குறையாமல் வைத்திருப்பது நல்லது.
6. பேட்டரியை மாற்றுதல்:
பேட்டரியை தேவைக்கேற்ப சார்ஜில் வைத்திருப்பதால் காலப்போக்கில் பேட்டரியின் திறன் பலவீனமடையும்.
எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் இந்த யதார்த்தம் இருக்கிறது. பேட்டரி பலவீனமடையும் போது அது லேப்டாப்பின் ஆயுளையும் பலவீனப்படுத்தும். ஆக உண்மையிலேயே பேட்டரி பலவீனமடையும் போது புதிய பேட்டரியை மாற்றுவது நல்லது.
அப்போது லேப்டாப்பின் ஆயுள் கெடாமல் இருக்கும்.
/tamilkurinji. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக