puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ozilla Firefox 14 வெளியிடப் பட்டது


ozilla Firefox 14 வெளியிடப் பட்டது

இணைய உலாவிகளில் முன்னிலை வகித்து வரும் Mozilla Firefox  உலாவியின் புதிய பதிப்பான வெர்சன் 14  வெளியிடப் பட்டுள்ளது .

இணைய பயன்பாட்டாளர்களுக்கு பல்வேறு வசதிகளை அளித்து வந்த Mozilla Firefox  மேலும் பல புதிய வசதிகளுடன் தற்போது வெளியிடப் பட்டுள்ளது. 





16 ஜூலை 2012

வீடியோக்களை மொபைல் போனுக்கு Convert செய்ய ஒரு சிறந்த மென்பொருள்!

Any Video Converter  -இது ஒரு இலவச மென்பொருள் .


DivX, XviD, MOV, RM, RMVB, MPEG, VOB, DVD, WMV, and AVI to MPEG-4 உள்ளிட்ட அனைத்து Format  களில் உள்ள வீடியோக்களையும் அனைத்து விதமான Format  களில் எளிதாக இம்மென்பொருள் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

அதிலும் குறிப்பாக தற்போது உபயோகத்திலிருக்கும் பலவிதமான மொபைல் போன்களுக்கு ஏற்ற வகையில் வீடியோக்களை மாற்ற இம்மென்பொருள் உதவுகிறது.

கட்டணம் இலவசம் உபயோகிப்பதும் எளிது.

டவுன் லோடு செய்ய இங்கே கிளிக்குங்கள்.



14 ஜூலை 2012

கணினியின் வேகத்தை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்!

நமது கணினி நாளடைவில் வேகத்தை இழக்கிறது.வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் கணினியின் வேகத்தைக் குறைக்கின்றன.


மேலும் registry  error  மற்றும் junk  file  கள் கணினியின் வேகத்தைக் குறைக்கின்றன. 

Comodo System Utility எனும் இம்மென்பொருள் கணினியின் பிழைகள் மற்றும் குப்பைக் கூளங்களை அகற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கிறது.

இதை செயல் படுத்துவதற்கு முன்பாக கணினியை Back  up  எடுத்து வைத்துக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளை இயக்குவதும் எளிது.

தரவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும்.




13 ஜூலை 2012

உங்கள் கணினியைப் பற்றி துல்லியமாக அறிய இலவச மென்பொருள் !

ccleaner,defraggler போன்ற கணினிக்கு மிகவும் பயனுள்ள மென்பொருட்களை இலவசமாகக் கொடுத்த Piriform  நிறுவனம் தற்போது கணினியின் செயல்பாடுகள்  மற்றும் கணினியில் நிறுவப் பட்டுள்ள ஹார்டுவேர் மற்றும் ஆப்பரேடிங் சிஸ்டம் பற்றி தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் Speccy  எனும் மென்பொருளை தற்போது இலவசமாக வழங்குகிறது.


கணினியின் வன்பொருட்களின் விபரங்களைத் தருவதோடு மட்டுமல்லாது அவற்றின் தற்போதைய வெப்பநிலை குறித்த தகவல்களையும் துல்லியமாகத் தருகிறது.

தேவைப் படுவோர் இங்கு கிளிக் செய்து மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள்.


24 பிப்ரவரி 2012

உலகின் மிகச் சிறந்த இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Avast 7 டவுன்லோட்

சமீப காலமாக வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களில் ஒரு சிறந்த இடத்தை பெற்று வருகிறது Avast  Antivirus  மென்பொருள் .

பணம் கொடுத்து வாங்கும் சில மென்பொருட்களை விட இம்மென்பொருளின் இலவச பதிப்பு சிறப்பாக செயல் படுகிறது .

இதன் அண்மைய பதிப்பான Version  7  தற்போது வெளியிடப்பட்டுள்ளது .தேவைப் படுவோர் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள் . 

தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும் .


03 நவம்பர் 2011

மடி கணினிக்கு பயனுள்ள ஒரு இலவச மென்பொருள் !

BatteryInfoView .

இது ஒரு இலவச மென்பொருள் .இது மடி கணினிகளுக்காக உருவாக்கப்பட்டது. இதை மடி கணினியில் நிறுவி இயக்கினால் மடி கணினியில் பொருத்தப் பட்டிருக்கும் பேட்டரி குறித்த அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும் .


மடி கணினியை தயாரித்த நிறுவனம் சீரியல்  நம்பர் போன்றவற்றை அறியலாம் அத்தோடு  பேட்டரியில் எத்தனை சதவீதம் சக்தி காலியாகியுள்ளது இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும் போன்ற விபரங்களை அறிந்து கொள்ள முடியும் .மிகவும் பயனுள்ள இம்மென்பொருளின் அளவு மிகச்சிறியது. 



02 செப்டம்பர் 2011

இலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த 5 தளங்கள் !


கணினி பயன்பாட்டுக்கு மென்பொருட்கள் மிகவும் அவசியமானவை.மென்பொருட்களை பதிவிறக்க பல்வேறு தளங்கள் உள்ளன .இவற்றில் சிறந்த ஐந்து தளங்களை இங்கே பகிர்கின்றேன் .

1) Download.cnet

இந்த தளம் 14 ஆண்டு பழமையானது .லட்சக்கணக்கான இலவச மற்றும் முயற்சி மென்பொருட்களை கொண்டுள்ளது .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .


2) Softpedia

இதுவும் ஒரு மிகச்சிறந்த தளம் .இத்தளத்தில் தொழில் நுட்ப செய்திகளும் உண்டு இலவச ,பகிர்மான ,முயற்சி மென்பொருட்களை வகை பிரித்து கொடுத்திருப்பது அருமை .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள்


3) Filehippo

இது ஒரு பிரபலமான இலவச மென்பொருள் தளம் .மென்பொருட்களை அப்டேட் செய்யவும் இங்கே வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும் .


4) ZDnet

இது ஒரு மிகப் பெரிய மென்பொருள் களஞ்சியம் .இங்கு கணினி மற்றும் மொபைல் போன்களுக்கான  இலவச மற்றும் முயற்சி மென்பொருட்கள் வகை வகையாக கிடைக்கின்றன .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள்

5) Tucows



மேலே குறிப்பிட்டுள்ளவைகளைப் போல் இதுவும் ஒரு சிறந்த தளம்தான் .இங்கே சுட்டி தளத்திற்கு செல்லுங்கள் .


17 ஜூலை 2011

Top 10 Firefox நீட்சிகள் 2011 (பாகம் 1 )

இணைய பாவனையாளர்களுக்கு Firefox  ன் பல்வேறு நீட்சிகள் மிகவும் உபயோகமாக உள்ளன .2011  ஆம் ஆண்டின் சிறந்த 10  நீட்சிகள் உங்கள் பார்வைக்கு .


11 ஜூலை 2011

ஒரே நேரத்தில் பல G MAIL ACCOUNT களை பயன்படுத்த நீட்சி !

மின்னஞ்சல் வசதிக்கு இன்று பலரும் GMAIL  பயன்படுத்துகிறார்கள்.சிலருக்கு gmail ல் ஒன்றுக்கும் மேற்பட்ட ACCOUNT  கள் இருக்கும் . 

சாதாரணமாக ஒரு ACCOUNT  மூலம் LOGIN  செய்துவிட்டு அதை SIGNOUT  செய்யாமல் இன்னொரு ACCOUNT ஐ பயன்படுத்த இயலாது .


பல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இலவச மென்பொருள் !

தற்போது நாம் டிஜிட்டல் கேமராக்கள் மூலமாக எடுக்கும் புகைப்படங்கள் அளவில் பெரியதாக இருக்கும் .இவற்றை மின்னஞ்சல் மூலமாக பிறருக்கு அனுப்புவதற்கோ அல்லது முகநூல் ,வலைபூக்களில் பகிர்வதற்கோ சிரமமாக இருக்கும் .

இவற்றின் அளவை குறைப்பதன் மூலம் கையாளுவதற்கு எளிதாக இருக்கும் .படங்களை RESIZE  செய்ய பல மென்பொருட்கள் உள்ளன .

இந்த மென்பொருளில் உள்ள சிறப்பு ஒரு FOLDER  ல் உள்ள படங்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் தேவையான அளவில் RESIZE  செய்து தேவையான இடத்தில் சேமிக்கலாம் .மேலும் ஒரு FOLDER  ல் உள்ள படங்களின் பெயர்களையும் ஒரே கிளிக்கில் மாற்றலாம் .

FastStone Photo Resizer என்ற இந்த மென்பொருள் ஒரு இலவச மென்பொருள்.அளவு மிக மிக குறைவு (1  MB ).பயன்படுத்துவதும் மிக எளிது. டவுன்லோடு செய்து பயன்படுத்த விரும்புபவர்கள் இங்கே சுட்டுங்கள்



05 ஜூலை 2011

வந்துவிட்டது avast antivirus ன் புதிய பதிப்பு !

இலவச antivirus program களில் சிறந்ததாக உலகில் அதிகம்பேரால் கருதப்படும் avast antivirus ன் புதிய பதிப்பு 6.0.1203 வெளி  வந்துள்ளது  .
பணம் கொடுத்து வாங்கப்படும் வைரஸ்  எதிர்ப்பு மென்பொருட்களுக்கு இணையாக இது செயல்படுகிறது .

ஒருமுறை இதை பயன்படுத்தியவர்கள் பிற மென்பொருட்களுக்கு மாற விரும்பமாட்டார்கள் .
இணைய தளம் வாயிலாக மற்றும் removable flash drive கள் மூலமாக பரவுகின்ற வைரஸ்கள் ,மால்வேர்களை எதிர்த்து நன்கு போரிடுகிறது .

உபயோகிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள் .


டிஸ்கி : அதிகம் புகழ்வதனால் avast நிறுவனத்தின் பிரதிநிதியாக என்னை கருதவேண்டாம் .பயன்படுத்தி பார்த்ததால் சொல்கிறேன் .


28 ஜூன் 2011

ஒரே கிளிக்கில் அனைத்து Program மற்றும் விண்டோக்களை மூட !

கணினியில் வேலை செய்து விட்டு அணைக்கும் தருவாயில் பல புரோகிராம்கள் மற்றும் விண்டோக்களை திறந்து இருந்தால் அவற்றை ஒவ்வொன்றாக மூடுவது சற்று கடினமாக இருக்கும் .



25 ஜூன் 2011

Office 2007 கோப்புகளை திறக்க முடியவில்லையா ?


MS Office பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் சிரமங்களில் ஒன்று office 2007 அல்லது office 2010 மூலமாக உருவாகிய கோப்பை office 2003 அல்லது  office 2000 மூலமாக திறக்க முடியாது . 
மேற்கண்ட திறக்க முடியாத கோப்புகளை திறக்க வசதியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச மென்பொருள் உதவுகிறது .


23 ஜூன் 2011

5 சிறந்த வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்கள் !

மென்பொருட்களில் வீடியோ எடிட்டிங் மென்பொருட்களுக்கு தனி இடம் உண்டு .
கட்டண மென் பொருட்களை போல் அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய 5  வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்களை பாப்போம் .


06 ஜூன் 2011

தமிழில் தட்டச்சு செய்ய கூகுள் தரும் மென்பொருள் !


தமிழில் தட்டச்சு செய்வது சிலருக்கு சவாலான விஷயமாக இருக்கும். முக்கியமாக பதிவு எழுதுபவர்களுக்கும் பதிவுகளில் கருத்துக்களை எழுதுபவர்களுக்கும் தமிழ் தட்டச்சு மிகவும் அவசியமானது .

இதற்கு பல மென்பொருட்கள் உள்ளன என்றாலும் கூகுள் தரும் GOOGLE IME எனும் இந்த இலவச மென்பொருள் மூலம் தட்டச்சு செய்வது மிகவும் எளிதாக உள்ளது .


05 ஜூன் 2011

அனைத்து வீடியோக்களையும் அனைத்து FORMAT ல் CONVERT செய்ய இலவச மென்பொருள் !

FREEMAKE  VIDEO  CONVERTER
இது ஒரு இலவச மென்பொருள் .
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் எந்த ஒரு FORMAT  ல் உள்ள வீடியோவையும் AVI,MP4,WMV,SWF,3GP,MPEG,MP3 உட்பட பல்வேறு FORMAT  களில் CONVERT  செய்ய முடியும் .
மேலும் YOUTUBE  உள்ளிட்ட 40  தளங்களில் உள்ள வீடியோக்களை அத்தளங்களிலிருந்து நேரடியாக CONVERT  செய்ய முடியும் .


03 ஜூன் 2011

A \ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை !

A \C  கார் பயன்படுத்துபவரா  நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .

A \C  காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C  ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C  ஐ இயக்கவேண்டும் .

இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD  ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50  மில்லி கிராம் .


30 மே 2011

AMR FILE களை MP3 ஆக CONVERT செய்ய இலவச மென்பொருள் !

பல்வேறு  நிறுவனங்களின்  மொபைல் போன்களில் நமது குரலையோ அல்லது வேறு ஏதாவது தேவையான ஒலிகளையோ பதிவு செய்தால் அது AMR எனப்படும் கோப்பு வகையில் சேமிக்கப்படும் .

இதை நாம் நமது கணினிக்குள் மாற்றம் செய்தால் கணினியிலுள்ள அநேகமான PLAYER கள் அதை PLAY செய்யாது .மேலும் அதை CD ல் பதிவு  செய்தாலும் CD PLAYER ஆல் AMR கோப்பை இயக்க முடியாது .

இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வாக ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது .AMR TO MP3 CONVERTOR என்று அழைக்கப்படும் இந்த மென்பொருளை கணினியில் நிறுவுவதன் மூலம் AMR கோப்புகளை MP3 கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும் .


26 மே 2011

USB பிளாஷ் டிரைவ்களை வைரஸில் இருந்து பாதுகாக்க இலவச மென்பொருள் !

   கணினியில் பெரும்பாலான வைரஸ்கள் flash drive கள் மூலமாகவே பரவுகின்றன .பொது இடங்களில் (பிரவுசிங் சென்டர்கள் ,கல்லூரிகள்) உள்ள கணினிகளில் நமது flash drive களை பயன்படுத்தும்போது வைரஸ் தாக்குதலுக்கு வாய்ப்புகள் அதிகம் .
      
      அது போன்ற சமயங்களில் நமது பிளாஷ் டிரைவ்களை பாதுகாக்க ஒரு நல்ல இலவசமாக கிடைக்கக்கூடிய USB DEFENDER எனும் மென்பொருள் உள்ளது .இதை தரவிறக்கி நமது flash drive ல் நிறுவி வைத்துக்கொண்டால் ஒரு தடுப்பு மருந்து போல் செயல்பட்டு flash drive ஐ பாதுகாக்கும் .


25 மே 2011

USB safely remove பிரச்சினையா? இலவச மென்பொருள் !

        உங்கள் கணினியில் இணைத்த USB DEVICE களை SAFELY REMOVE செய்ய முயற்சி செய்யும்பொழுது சிலசமயங்களில் இது போன்ற POP UP வரலாம் .
          
   எத்தனை முறை முயற்சி செய்தாலும் தொடந்து இது போலவே வந்துகொண்டிருக்கும் .FORMAT செய்ய முயற்சித்தால்  அதுவும் முடியாது .இந்த POP UP ஐ அலட்சியம் செய்துவிட்டு DEVICE ஐ அகற்றினால் அதிலுள்ள கோப்புகள் அனைத்தும் அழிந்துவிடும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக