puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள - HTML Tags ( Part-1)


எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள - HTML Tags ( Part-1)

வணக்கம் நண்பர்களே..!

கடந்த இடுகையில் HTML குறிஒட்டுகளில் இரண்டைப் பார்த்தோம்.
1. <H1></H1>..<H6></H6> வரையில் முடியும் தலைப்பு குறிஒட்டுகள்.
2. ஒரு ஆவணத்தின் முக்கியப் பகுதிகளைப் பிரித்துக்காட்ட <HR> என்ற குறிஒட்டைப் பார்த்தோம். இதற்கு முடிவுக் குறிஒட்டு(End Tag) இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்கிறேன்.


இன்றைய பாடத்திற்குவருவோம்.

HTML குறிஒட்டுகள்(HTML Tags) நிறைய இருக்கிறது. அவற்றில் முக்கியமானதாகக் கருதப்படும் ஒரு சிலவற்றைப் சுருக்கமாகவே பார்ப்போம்.


ஒரு வாக்கியத்தை அல்லது உரையை தடிமனாக காட்டவும்(Bold), சாய்வாக காட்டவும்(Italic), அந்த உரைக்கு அடிக்கோடு(Underline) மூன்று முக்கிய குறிஒட்டுகள்(Tags) இருக்கின்றன.

அவை:

  • வாக்கியம் அல்லது வார்த்தையை தடிமனாக(Bold) காட்ட <B>மற்றும்</B> குறி ஒட்டுகள் பயன்படுகின்றது.
  • வாக்கியம் அல்லது வார்த்தையை சாய்வாக(Italic) தடிமனாக காட்ட <I>மற்றும்</I> குறி ஒட்டுகள் பயன்படுகின்றது.
  • வாக்கியம் அல்லது வார்த்தையை அடிக்கோடிட்டு காட்ட(Underline) <U>மற்றும்</U> குறி ஒட்டுகள் பயன்படுகின்றது.

உதாரணம்:


HTML Code
Browser Display
This text is <b>bold</b>
This text is bold
This text is<i>italicized.</i>
This text iitalicized.
This text is<u>underlined.</ul>
This text is underlined.

முக்கிய குறிப்பு: ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட உரைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குறி ஒட்டுகளை(Tags) பயன்படுத்த முடியும். உதாரணமாக ஒரே உரையைத் தடிமனாகவும், சாய்வாகவும் காட்டமுடியும்.  அதே உரைக்கு அடிக்கோடிடவும் முடியும்.

இவ்வாறு HTML-ல் இருக்கிற அனைத்து சிறப்புக் குறிஒட்டுகளையும் ஒரு உரைக்கு பயன்படுத்தமுடியும்.

<b><i><u>This is bold and italic and underline</b></i></u>

இதன் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும். 

This is bold and italic and underline


இவற்றை ஒரு தனி HTML ஆவணமாக நோட்பேடில் எழுதிப் பாருங்கள்..

<HTML>
<BODY>
<B>THIS IS BOLD</B>
<I>THIS IS ITALIC</I>
<U>THIS IS UNDERLINE</U>
<B><I>THIS IS BOLD AND ITALIC</B></I>
</BODY>
</HTML>

இதன்வெளிப்பாட்டை முந்தைய பதிவில் கூறியபடி உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற ஏதேனும் ஒரு வலை உலவியில்(internet browser) திறந்துப் பாருங்கள்.







.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக