puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி -


கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page

வணக்கம் நண்பர்களே...!

Google சேவையைப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இணையத்தை வளைத்துப் போட்டிருக்கிறது கூகிள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய வசதிகளை உருவாக்கி வாடிக்கையாளர்களைக் கவர்வதில் கூகிளுக்கு நிகர் கூகிள்தான்.

நீங்கள் கூகிளில் பல்வேறுபட்ட கணக்குகளை வைத்திருந்தால், அவற்றை ஒரே நேரத்தில் திறந்து பார்க்க முடியாது. ஒவ்வொரு கணக்கையும் திறந்து பார்க்க வேண்டுமானால் ஒரு கணக்கை logout செய்துவிட்டுதான், வேறொரு கணக்கைத் திறந்து பார்க்க முடியும்.

அல்லது multiple sign in எனும் வசதியைப் பயன்படுத்தியே மற்ற கணக்கைத் திறந்து பார்த்துக்கொள்ள முடியும். இதற்கும் ஒவ்வொரு முறையும் அந்தக் கணக்கைத் திறக்க யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைய வேண்டும்.

தற்போது வரவிருக்கிற புதிய வசதியின் மூலம் இவ்வாறு மற்றொரு கணக்கைத் திறக்க யூசர்நேம், பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. Multiple Accounts login page வசதியின் மூலம் உங்களுடைய மற்ற google accounts களையும் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் ஒரு முறை கூகிளில் லாகின் செய்தால் போதும். மற்ற கூகிள் கணக்குகளையும் அங்கு காட்டும். தேவைப்படுகிற google account -ல் கிளிக் செய்து அதை திறந்துகொள்ளலாம். இதனால் ஒவ்வொரு முறையும் Username, Password கொடுப்பது தடுக்கப்படுகிறது.
add multiple accounts page in google
add multiple accounts in google

இந்த வசதியைப் பெற நீங்கள் இந்த லிங்கில் சென்று ஆக்டிவேட் செய்துகொள்ளவும்.

இந்தப் பக்கத்தில் உள்ள enable this feature என்ற சுட்டி அழுத்துவதன் மூலம் உங்களுக்கு இவ்வாறு ஒரு பக்கம் தோன்றும். அதில் உங்களுடைய மற்ற கூகிள் அக்கவுண்ட்களுக்கான e-mail address கொடுத்து, ஒவ்வொரு அக்கவுண்ட்டாக அதில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

விருப்பமில்லையெனில் இந்த வசதியை நிறுத்தி வைத்துக்கொள்ள முடியும். இந்த பக்கத்தில் தேவையான அனைத்து விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நன்றி..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக