puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

வீடியோவிலிருந்து அசையும் படங்கள் (Animated GIF) உருவாக்க..


வீடியோவிலிருந்து அசையும் படங்கள் (Animated GIF) உருவாக்க..

வணக்கம் நண்பர்களே.. !

தமிழில் அசைவுப் படங்கள் என்றழைக்கப்படும் Animated Gif படங்களை நாமே உருவாக்கும் முறையைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.. நாம் பல வலைத்தளங்களில் இவ்வாறான அசைவுப் படங்களை(Animated GIF Images) பார்த்திருப்போம். வாசகர்களைக் கவர்ந்திழுக்க இந்த மாதிரியான அனிமேட்டட் ஜிஃப் (Animated Gif) படங்கள் பெரிதும் பயன்படும்.


அசைவுப் படங்களை உருவாக்க போட்டோஷாப்(photoshop software) போன்ற மென்பொருள்கள் பயன்பட்டாலும், உங்களுக்குப் பிடித்த காட்சிகளை, நீங்கள் விரும்பிய வீடியோக்களிலிருந்து அசைவுப் படங்களாக மாற்றி, அதை உங்கள் வலைத்தளத்தில் பயன்படுத்த முடியும்.  இம்மென்பொருள் உங்களுக்குப் பயன்படும்.

உங்களுக்குப் பிடித்தமான காணொளியிலிருந்து (Video) நீங்கள் அசைவுப் படங்களை உருவாக்க முதலில் இந்த Video to animated gif என்ற இலவச மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

பிறகு அசைவுப் படங்களை உருவாக்க விரும்பும் வீடியோவை(Video) இம்மென்பொருளின் மூலம் திறந்துகொள்ளுங்கள்.

Movie to gif free software
இதில் இருக்கும் டிராக்கிங் பாரில் (Track bar) {  } என்ற குறிகளைப்பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான பகுதியை நீங்கள் GIF கோப்பாக மாற்றி சேமிக்க முடியும்.

வீடியோக்காட்சியில் எந்த பகுதியிலிருந்து ஆரம்பித்து, எந்தப்பகுதியில் முடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இந்த குறிகள் உள்ள பட்டன் பயன்படும். ஒரு அனிமேஷன் ஜிஃப் பைல் ஆரம்பிக்க வேண்டிய இடம் வந்ததும்   {   குறியையும் , அனிமேஷன் முடியும் பகுதியைக் குறிக்க   }   பட்டனையும் அழுத்தினால் போதுமானது. இடைப்பட்ட பகுதியில் உள்ள வீடியோவானது உங்களுக்கு GIF file ஆக சேமிக்க முடியும்.

இரண்டு பட்டன்களையும் அழுத்தி இடைப்பட்ட வீடியோ பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டதும், மெனுவில் உள்ள Export என்பதை அழுத்துவதன் மூலம் நீங்கள் தேர்ந்தெடுத்தப் பகுதியானது GiF கோப்பாக மாற்றம் செய்யப்படும். பிறகு நீங்கள் அதை சேமித்துக்கொள்ளலாம்.



புதிய வெர்சனில் உள்ள Save Frame(s)என்பதில் உள்ள கீழ்விரி மெனுவில் Save animated Gif, Save current frame as PNG, Save current frame as JPG என்ற வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய பார்மட்டில் உங்களது படங்களை சேமித்துக்கொள்ளுங்கள்.

இம்மென்பொருளைத் தரவிறக்க Download Now என்ற பட்டனை சொடுக்கவும்:


இம்மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அசையும் படம் ஒன்று...

animated gif picture


நன்றி நண்பர்களே..!

- தங்கம்பழனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக