செய்திகள்
puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
வியாழன், 23 ஆகஸ்ட், 2012
செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012
உங்கள் கையெழுத்துகளை எழுத்துருக்களாக மாற்ற..
உங்கள் கையெழுத்துகளை எழுத்துருக்களாக மாற்ற..
how to use your own fonts in your
computer
விதவிதமான எழுத்துருக்களைப் பயன்படுத்தி போட்டோஷாப்(Photoshop), வலைத்தளங்கள்(Websites)... சொற்செயலிகள்(Word Processor) ஆகியவற்றில் பயன்படுத்தியிருப்போம். பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் உங்கள் கைப்பட எழுதிய கையெழுத்துகளையே உங்கள் கணினியில் எழுத்துருவாக நிறுவிப் பயன்படுத்த முடியும்.
ஆச்சர்யமாக இருக்கிறதா? இது உண்மையும் கூட.. உங்களை கையெழுத்துகளை உங்களை கணினியில் பயன்படுத்தக்கூடிய வகையில் எழுத்துருவாக மாற்றித் தருகிறது ஒரு இணையதளம். இதற்கு தளத்தில் சொல்லப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும்.
உங்களுடைய உண்மையான கையெழுத்துகளைக் கொண்டு கணினியிலும் எழுதலாம்.
செய்முறை:
1. முதலில் இந்த இணையதளம் செல்லுங்கள். அங்கு Print your Template என்பதை கிளிக் செய்யுங்கள்..
2. தோன்றும் பக்கத்தில் PDF paper size is A4; for all other countries: என்ற தலைப்பின் கீழ் இணைப்பைக் கிளிக் செய்துகொண்டு ஒரு கோப்பை print செய்துகொள்ளுங்கள்.
3. பிறகு அதில் உங்கள் கைப்பட எழுத்துக்களை எழுதுங்கள். இதற்கு உங்கள் Ball Point பேனாவை உபயோகிப்பது நலம். அல்லது Skech போன்றவைகளை உபயோகிக்கலாம். இந்த படிவத்தில் உள்ள எழுத்துக்களை அனைத்தையும் நிரப்புங்கள்.
4. எப்படி நிரப்புவது என்பதை கீழுள்ள படத்தை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
பச்சை நிறத்தில் டிக் செய்துள்ளது சரியான முறை. சிவப்பு நிறத்தில் உள்ளது தவறான முறை. படத்தை நன்றாக கவனித்துப் பார்த்தால் புரியும்.
5. உங்கள் எழுத்துக்களை படிவத்தின் கட்டத்தில் இருபக்கமும் நான்கு வரிகள் இருக்கும். இந்த நான்கு கோடுகளுக்குள் உங்கள் எழுத்துகள் அமைய வேண்டும். எழுத்துக்களை எழுதுவதில் கவனத்துடன் செயல்படுங்கள்.
6. அனைத்து எழுத்துக்களையும் நிரப்பி முடித்துவிட்டு அந்தப் படிவத்தை ஒரு முறை Scan செய்துவிடுங்கள். Scan செய்த படமானது .gif, .jpg, .jpeg, .png, .pdf, .tif, and .tiff போன்ற ஏதாவது ஒரு கோப்புமுறைகளில் இருக்க வேண்டும். இது கட்டாயம்.
7. சேமித்த கோப்பை தரவேற்ற பக்கப்பட்டையில் உள்ள (sidebar)Upload Template என்பதை அழுத்தவும். தோன்றும் பக்கத்தில் Font Name என்பதில் உங்களுடைய எழுத்துருவிற்கு பெயர் கொடுங்கள். பிறகு Choose File என்பதைக் கிளிக் செய்து நீங்கள் Scan செய்த படிவப் படத்தை(Scanned Image) தரவேற்றம் செய்துவிடவும்.
இதற்கு கிட்ட தட்ட ஒரு நிமிட நேரம் எடுத்துக்கொள்ளும். உங்கள் இணைய இணைப்பின் வேகத்தைப் பொறுத்து கூடுதலாக ஓரிரு நிமிடங்கள் ஆகலாம்...
அப்லோட் செய்துவிட்டு next button -ஐ அழுத்துங்கள்.. இப்போது உங்கள் கையெழுத்துகளின் மாதிரியை பார்க்கலாம்..
அந்த பக்கத்தில் உள்ள Dowonload font என்பதை அழுத்தி உங்கள் கையெழுத்துகளைக் கொண்ட எழுத்துருக் கோப்பைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு உங்களிடம் கூப்பன் கோட் கேட்கும்.. இந்த கூப்பன் கோட்டைப் பெற நீங்கள் 10$ பேபால் முறையில் அவர்களுக்கு செலுத்த வேண்டும். ஏறக்குறைய நம்முடைய பண மதிப்பில் 500 ரூபாய். பிறகு கூப்பன் கோட்டை பெற்றுக்கொண்டு அதில் உள்ளிடவும். இப்போது உங்களுக்குத் தேவையான எழுத்துருவை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
எழுத்துருவை நிறுவும் முறை(Font Installation):
தரவிறக்கிய உங்கள் எழுத்துருவை கணினியில் Font போல்டரில் நிறுவவும். இதற்கு உங்கள் கணினியில் Font என தட்டச்சிட்டு தேடுங்கள்.. அல்லது நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்தினால், Start==>control Panel==>appearance and Personalisation==>Font என்பதை கிளிக் செய்யவும்.
விண்டோஸ் XP பயன்படுத்தினால் அதில்Start==>settings==>control Panel==>Fonts என்பதைத் திறந்துகொள்ளுங்கள். பிறகு அதில் உங்கள் எழுத்துருவை காப்பி பேஸ்ட் செய்யவும். அல்லது Drag and Drop முறையில் எழுத்துருக் கோப்பை Font Folder-ல் இழுத்துவிடவும். பிறகு கணினியை ஒரு முறை மறுதொடக்கம்(Restart) செய்துகொள்ளுங்கள்..
மீண்டும் கணினியை இயக்கி, ஒரு சொற்செயலி ms-word அல்லது wordpad போன்ற ஏதேனும் ஒன்றில் நீங்கள் தட்டச்சிடுங்கள். அந்த தட்டச்சிட்ட எழுத்துகளை தேர்வுசெய்து உங்கள் சொந்த எழுத்துருவை தேர்ந்துடுத்துப் பாருங்கள்.. நீங்கள் கைப்பட எழுதிய எழுத்துருக்கள் கணினியில் இருக்கும்.. !!!
தங்கம்பழனி thanks
பிளாக்கரில் குறிப்பிட்ட லேபிளின் தலைப்புகளை மட்டும் ஒரே பக்கத்தில் காட்டுவது எப்படி?
பிளாக்கரில் குறிப்பிட்ட லேபிளின் தலைப்புகளை மட்டும் ஒரே பக்கத்தில் காட்டுவது எப்படி?
வணக்கம் நண்பர்களே..! பிளாக்கரில் குறிப்பிட்ட லேபிளில் அடங்கியுள்ள பதிவுகளின் தலைப்புகளையும் ஒரே பக்கத்தில் காட்டுவது எப்படி? (how to show specific label post titles in a page) என்பதைப் பார்ப்போம்.
இவ்வாறு ஏன் செய்ய வேண்டும்?
குறிப்பிட்ட லேபிளின் பதிவுகளின் தலைப்புகளை மட்டும் காட்டுவதால் என்ன பயன் என்று நீங்கள் நினைக்கலாம்.. உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் ஒரு குறிப்பிட்ட லேபிளை மட்டும் கிளிக் செய்யும்போது அதிலுள்ள பதிவுகள் அனைத்தும் திறக்கும். குறிப்பிட லேபிளின் கீழ் அதிக பதிவுகள் இருந்தால் அந்தப் பக்கம் திறக்க நேரம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும், மேலும் அதிக பதிவுகளை ஒரே பக்கத்தில் காட்டவும் இந்த முறை பயன்படுகிறது.
இணையத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு தளமாக இருந்தாலும் வரும் வாசகர்கள்(readers), பார்வையாளர்கள்(Visitors) அந்த தளம் விரைவாகத் திறப்பதை விரும்புவார்கள்.. ஏன் நாமும் கூட அதையே விரும்புவோம். ஒரு இணைப்பை சொடுக்கியவுடன் அந்தப் பக்கம் விரைவாக திறந்தால்தான் அதிலிருக்கும் கட்டுரைகளை(Articles) முழுவதுமாக படிக்க எண்ணம் வரும்.
ஒரு பக்கமானது திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்போது, அந்தப் பக்கத்தை பார்வையிடாமலேயே அடுத்த பக்கத்திற்கு, அல்லது வேறொரு தளத்திற்கு பார்வையாளர்கள் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவேதான் இத்தகைய யுக்திகளைப்(Tricks) பயன்படுத்தி வாசகர்கள் நிறைய நேரம் நம் தளத்தில் நேரத்தை செலவிட வைக்க முடியும்.
இதனால் உங்களின் உண்மையான பயனுள்ள பதிவுகள் வாசகர்களுக்கு முழுமையாகவும் சென்றடையும்.
சரி.. லேபிளின் தலைப்புகளை ஒரே பக்கத்தில் கொண்டுவருவது(show label post in one page) எப்படி? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
செய்முறை:
வழக்கம்போல உங்கள் பிளாக்கரில் உள்நுழைந்துகொள்ளுங்கள்.
Design==>Edit Html==>Expand Widget template என்பதைக் கொடுத்துவிடவும். இப்போது கீழ்காணும் கோடிங்கை தேடுங்கள்.
உங்கள் வார்ப்புருவின் நிரல்வரிகள்(Template coding) தோன்றும். நிரல்வரிகளில் இந்த கீழ்க்கண்ட நிரலைத் தேடுங்கள். எளிதாக தேட Ctrl+F என்பதைக் கொடுத்து தேடலாம்.
<b:include data='post' name='post'/>கோடிங்கை தேடி பெற்றவுடன், அதை முழுமையாக நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக கீழ்க்காணும் கோடிங்கை காப்பி(Copy) செய்து நீக்கிய நிரல்வரி இருந்த இடத்தில் பேஸ்ட்(Past) செய்யவும். புரியாதவர்கள் கீழிருக்கும் படத்தைப் பார்க்கவும்.
<!--Labels in menu From:www.spiceupyourblog.com--><b:if cond='data:blog.homepageUrl !=data:blog.url'><b:if cond='data:blog.pageType != "item"'><a expr:href='data:post.url'><li/><data:post.title/></a><br/><br/><b:else/><b:include data='post' name='post'/></b:if><b:else/><b:include data='post' name='post'/></b:if><!--Labels in menu end-->
செய்த மாற்றத்தை Save Template கொடுத்து சேமித்துக்கொள்ளவும். இனி நீங்கள் உங்களுடைய லேபிளை கிளிக் செய்து பார்க்கும்போது லேபிளில் அடங்கியுள்ள பதிவுகளின் தலைப்புகள் மட்டும் தெரியும். விரைவில் அந்தப் பக்கம் திறக்கும். இதனால் உங்களின் பழைய பதிவுகள் அனைத்தையும் புதிய வாசகர்கள், பார்வையாளர் படிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
**********
இதுபோன்று
வேறு வகையான வித்தியாசமான வடிவமைப்பைத் தரும் நிரல்வரிகள் ஒரு சில..<b:if cond='data:blog.homepageUrl != data:blog.url'>
<b:if cond='data:blog.pageType != "item"'>
<a expr:href='data:post.url'>
<div style='padding:6px 0 6px 5px;border-right:1.5px solid #000;border-bottom:1.5px solid #000;margin-bottom:2px;background:#E6E4E4;color:#000000;'>
<img alt='>>>' border='0' src='https://lh5.googleusercontent.com/-HP5XyclRQic/TXMMAKmlg5I/AAAAAAAAAQk/wrCGFu9jzmg/s1600/sidebar-icon.png'/>
<data:post.title/></div></a>
<b:else/>
<b:include data='post' name='post'/>
</b:if>
<b:else/>
<b:include data='post' name='post'/>
</b:if>
- தங்கம் பழனி thanks
வீடியோவிலிருந்து அசையும் படங்கள் (Animated GIF) உருவாக்க..
Labels: free software, technology, இலவச மென்பொருள், தொழில்நுட்பம்
வீடியோவிலிருந்து அசையும் படங்கள் (Animated GIF) உருவாக்க..
வணக்கம் நண்பர்களே..
!
தமிழில் அசைவுப் படங்கள் என்றழைக்கப்படும் Animated Gif படங்களை நாமே உருவாக்கும் முறையைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.. நாம் பல வலைத்தளங்களில் இவ்வாறான அசைவுப் படங்களை(Animated GIF Images) பார்த்திருப்போம். வாசகர்களைக் கவர்ந்திழுக்க இந்த மாதிரியான அனிமேட்டட் ஜிஃப் (Animated Gif) படங்கள் பெரிதும் பயன்படும்.
அசைவுப் படங்களை உருவாக்க போட்டோஷாப்(photoshop software) போன்ற மென்பொருள்கள் பயன்பட்டாலும், உங்களுக்குப் பிடித்த காட்சிகளை, நீங்கள் விரும்பிய வீடியோக்களிலிருந்து அசைவுப் படங்களாக மாற்றி, அதை உங்கள் வலைத்தளத்தில் பயன்படுத்த முடியும். இம்மென்பொருள் உங்களுக்குப் பயன்படும்.
உங்களுக்குப் பிடித்தமான காணொளியிலிருந்து (Video) நீங்கள் அசைவுப் படங்களை உருவாக்க முதலில் இந்த Video to animated gif என்ற இலவச மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிறகு அசைவுப் படங்களை உருவாக்க விரும்பும் வீடியோவை(Video) இம்மென்பொருளின் மூலம் திறந்துகொள்ளுங்கள்.
இதில் இருக்கும் டிராக்கிங் பாரில் (Track bar) { } என்ற குறிகளைப்பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான பகுதியை நீங்கள் GIF கோப்பாக மாற்றி சேமிக்க முடியும்.
வீடியோக்காட்சியில் எந்த பகுதியிலிருந்து ஆரம்பித்து, எந்தப்பகுதியில் முடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இந்த குறிகள் உள்ள பட்டன் பயன்படும். ஒரு அனிமேஷன் ஜிஃப் பைல் ஆரம்பிக்க வேண்டிய இடம் வந்ததும் { குறியையும் , அனிமேஷன் முடியும் பகுதியைக் குறிக்க } பட்டனையும் அழுத்தினால் போதுமானது. இடைப்பட்ட பகுதியில் உள்ள வீடியோவானது உங்களுக்கு GIF file ஆக சேமிக்க முடியும்.
இரண்டு பட்டன்களையும் அழுத்தி இடைப்பட்ட வீடியோ பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டதும், மெனுவில் உள்ள Export என்பதை அழுத்துவதன் மூலம் நீங்கள் தேர்ந்தெடுத்தப் பகுதியானது GiF கோப்பாக மாற்றம் செய்யப்படும். பிறகு நீங்கள் அதை சேமித்துக்கொள்ளலாம்.
புதிய வெர்சனில் உள்ள Save Frame(s)என்பதில் உள்ள கீழ்விரி மெனுவில் Save animated Gif, Save current frame as PNG, Save current frame as JPG என்ற வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய பார்மட்டில் உங்களது படங்களை சேமித்துக்கொள்ளுங்கள்.
இம்மென்பொருளைத் தரவிறக்க Download Now என்ற பட்டனை சொடுக்கவும்:

இம்மென்பொருளைப்
பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அசையும் படம் ஒன்று...
நன்றி
நண்பர்களே..!
- தங்கம்பழனி
உங்கள் மொபைல் போனைக் காக்க சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள்
உங்கள் மொபைல் போனைக் காக்க சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள்
வணக்கம் நண்பர்களே..!
இப்போதெல்லாம் அனைவரிடம் பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ அழகான ஆன்ட்ராய்ட்
மொபைல் (Android) இருக்கிறது. கையில் மொபைல் இல்லாத இளைஞர்களை இப்போது பாரப்பது
அபூர்வம். இளைஞர்கள் மத்தியில் தற்போது இணையத்துடன் கூடிய மொபைல்களை (Mobile with
Internet) பயன்படுத்துவது என்பது தற்கால நாகரீகமாகவே மாறிவிட்டது. இணைய இணைப்பு
இல்லாத மொபைல்களை வைத்திருப்பவர்களை கண்டாலே ஏற இறங்கப் பார்க்கின்றனர். அந்த
அளவுக்கு மொபைல்களில் இணையப்பயன்பாடு மற்றும் முக்கியத்தவம் அதிகரித்துவிட்டது.
இணைய வசதியுடன் கூடிய மொபைல்கள் குறிப்பாக விலையுயர்ந்த மொபைல்கள், அதிக வசதிகளடங்கிய மொபைல்கள் (More Feautres)என நாளுக்கு நாள் வந்துக்கொண்டிருக்கிறது. நம்மவர்கள் விடாமல் பழைய மாடலை மாற்றிவிட்டு, புதிய மாடல்களுக்கு(New Model Phone) மாறுகின்றனர்.
ஆனால் மொபைல் பாதுகாப்பில் இவர்கள் கவனம் செலுத்துகிறார்களா? என்றால் அதுதான் இல்லை. அதிக விலைப்போட்டு வாங்கிய மொபைல்களை (Costly Mobiles) வைரஸ் தாக்கத்திலிருந்து காப்பதற்குரிய சரியான மென்பொருள்களை இவர்கள் பாவிப்பதில்லை. கட்டணம் கொடுத்து ஆன்டி வைரஸ் மென்பொருள்களை வாங்க இயலாதவர்கள் கீழிருக்கும் அற்புதமான, பயன்மிக்க இலவச மென்பொருள்களைப் பயன்படுத்தலாம். இவற்றை இலவசமாக தரவிறக்கம் செய்து உங்கள் மொபைல்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
மொபைல்களைப் பாதுகாக்க என்னென்ன மென்பொருள்கள் உள்ளன? எவை எவையெல்லாம் இலவசமாக கிடைக்கின்றன்? வாருங்கள் பார்ப்போம்..
உங்கள் மொபைல் போனைக் காப்பதற்கான Anti Virus ஒரு சில இருக்கின்றன. இலவசமாக கிடைப்பதில் சிறந்து விளங்குபவை கீழிருப்பவைகள்.
1. AVG Mobilation
இது உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான இலவச
ஆன்டிவைரஸ் ஆகும். ஆண்ட்ராய்ட் மொலைப்களுக்காக சிறப்பு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்
இதுவாகும்.
AVG Mobilation for Android features
2.
Lookout Mobile Security
இந்த வைரஸ் மெனப்பொருள் மொபைல்களுக்கு
பாதுகாப்பு (Mobile Security) வழங்குவதில் நன்றாக செயல்படுகிறது. இம்மென்பொருளில்
Online Storage வசயுடன் இருப்பதால் உங்களுடைய அனைத்து தகவல்களையும் சேமித்து
வைக்கலாம். மேலும் உங்கள் மொபைலில் உள்ள அனைத்து தகவல்களையும்(All Data)காப்பி
செய்துகொண்டு வேண்டும்போது பயன்படுத்தலாம். இமென்பொருளைத் தரவிறக்கம் கீழிருக்கும்
இணைப்பைச் சொடுக்கவும்.
தறவிறக்க இணைப்புச் சுட்டி: Download Mylook Out Mobile Anti Virus
3. NetQin Mobile Antivirus:
இச்சிறு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் (Anti
Virus Software) துரிதமாக செயல்படுகிறது. மொபைல்களுக்கு வைரஸ்களிடமிருந்து மிகச்
சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. கீழிருக்கும் இணைப்பைச் சொடுக்கி உங்கள்
மொபைல்களுக்குத் தேவையான Anti virus Sotware தரவிறக்கம்
செய்துகொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி: Download NetQit Mobile anti virus
குறிப்பு: ஒவ்வொரு தளத்திலும் தரவிறக்கம் செய்யும்போது, உங்களுடைய மொபைல் மாடல், மொபைல் நிறுவனத்தின் பெயர், மொழி (Mobile model, the mobile company's name, language) ஆகியவற்றை கொடுத்து டவுன்லோட் (தரவிறக்கம்)செய்துகொள்ளுங்கள்... நன்றி நண்பர்களே..!!!
இணைய வசதியுடன் கூடிய மொபைல்கள் குறிப்பாக விலையுயர்ந்த மொபைல்கள், அதிக வசதிகளடங்கிய மொபைல்கள் (More Feautres)என நாளுக்கு நாள் வந்துக்கொண்டிருக்கிறது. நம்மவர்கள் விடாமல் பழைய மாடலை மாற்றிவிட்டு, புதிய மாடல்களுக்கு(New Model Phone) மாறுகின்றனர்.
ஆனால் மொபைல் பாதுகாப்பில் இவர்கள் கவனம் செலுத்துகிறார்களா? என்றால் அதுதான் இல்லை. அதிக விலைப்போட்டு வாங்கிய மொபைல்களை (Costly Mobiles) வைரஸ் தாக்கத்திலிருந்து காப்பதற்குரிய சரியான மென்பொருள்களை இவர்கள் பாவிப்பதில்லை. கட்டணம் கொடுத்து ஆன்டி வைரஸ் மென்பொருள்களை வாங்க இயலாதவர்கள் கீழிருக்கும் அற்புதமான, பயன்மிக்க இலவச மென்பொருள்களைப் பயன்படுத்தலாம். இவற்றை இலவசமாக தரவிறக்கம் செய்து உங்கள் மொபைல்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
மொபைல்களைப் பாதுகாக்க என்னென்ன மென்பொருள்கள் உள்ளன? எவை எவையெல்லாம் இலவசமாக கிடைக்கின்றன்? வாருங்கள் பார்ப்போம்..
உங்கள் மொபைல் போனைக் காப்பதற்கான Anti Virus ஒரு சில இருக்கின்றன. இலவசமாக கிடைப்பதில் சிறந்து விளங்குபவை கீழிருப்பவைகள்.
1. AVG Mobilation
![]() |
AVG மொபைல் ஆன்டி வைரஸ் |
AVG Mobilation for Android features
- Scans apps, Setting, Files, Media in real time
- Backup and restore valuable apps and data
- kill tasks that slow tablet down
- Find lost or stolen tablet via google maps
- Lock and wipe device remotely protect privacy
![]() |
Lookout Mobile Anti-virus software |
தறவிறக்க இணைப்புச் சுட்டி: Download Mylook Out Mobile Anti Virus
3. NetQin Mobile Antivirus:
![]() |
மொபைல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் |
தரவிறக்கச் சுட்டி: Download NetQit Mobile anti virus
குறிப்பு: ஒவ்வொரு தளத்திலும் தரவிறக்கம் செய்யும்போது, உங்களுடைய மொபைல் மாடல், மொபைல் நிறுவனத்தின் பெயர், மொழி (Mobile model, the mobile company's name, language) ஆகியவற்றை கொடுத்து டவுன்லோட் (தரவிறக்கம்)செய்துகொள்ளுங்கள்... நன்றி நண்பர்களே..!!!
தங்கம்பழனி thanks
கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி -
கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page
வணக்கம்
நண்பர்களே...!
Google சேவையைப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இணையத்தை வளைத்துப் போட்டிருக்கிறது கூகிள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய வசதிகளை உருவாக்கி வாடிக்கையாளர்களைக் கவர்வதில் கூகிளுக்கு நிகர் கூகிள்தான்.
நீங்கள் கூகிளில் பல்வேறுபட்ட கணக்குகளை வைத்திருந்தால், அவற்றை ஒரே நேரத்தில் திறந்து பார்க்க முடியாது. ஒவ்வொரு கணக்கையும் திறந்து பார்க்க வேண்டுமானால் ஒரு கணக்கை logout செய்துவிட்டுதான், வேறொரு கணக்கைத் திறந்து பார்க்க முடியும்.
அல்லது multiple sign in எனும் வசதியைப் பயன்படுத்தியே மற்ற கணக்கைத் திறந்து பார்த்துக்கொள்ள முடியும். இதற்கும் ஒவ்வொரு முறையும் அந்தக் கணக்கைத் திறக்க யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைய வேண்டும்.
தற்போது வரவிருக்கிற புதிய வசதியின் மூலம் இவ்வாறு மற்றொரு கணக்கைத் திறக்க யூசர்நேம், பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. Multiple Accounts login page வசதியின் மூலம் உங்களுடைய மற்ற google accounts களையும் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் ஒரு முறை கூகிளில் லாகின் செய்தால் போதும். மற்ற கூகிள் கணக்குகளையும் அங்கு காட்டும். தேவைப்படுகிற google account -ல் கிளிக் செய்து அதை திறந்துகொள்ளலாம். இதனால் ஒவ்வொரு முறையும் Username, Password கொடுப்பது தடுக்கப்படுகிறது.
இந்த வசதியைப் பெற நீங்கள் இந்த லிங்கில் சென்று ஆக்டிவேட் செய்துகொள்ளவும்.
இந்தப் பக்கத்தில் உள்ள enable this feature என்ற சுட்டி அழுத்துவதன் மூலம் உங்களுக்கு இவ்வாறு ஒரு பக்கம் தோன்றும். அதில் உங்களுடைய மற்ற கூகிள் அக்கவுண்ட்களுக்கான e-mail address கொடுத்து, ஒவ்வொரு அக்கவுண்ட்டாக அதில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
விருப்பமில்லையெனில் இந்த வசதியை நிறுத்தி வைத்துக்கொள்ள முடியும். இந்த பக்கத்தில் தேவையான அனைத்து விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நன்றி..

add multiple accounts in google |

தங்கம்பழனிநன்றி..
இணையத்தில் இலவச வைரஸ் சோதனை செய்ய -Virustotal
இணையத்தில் இலவச வைரஸ் சோதனை செய்ய -Virustotal
இணையத்தின் மூலம் உங்கள்
கோப்புகளில் வைரஸ் உள்ளதா என்பதை கண்டறிய இத்தளம் பயன்படும்.
Virustotal என்ற இத்தளத்தில் உங்கள் கோப்புகளை Browse என்பதை கிளிக் செய்து சோதனை செய்ய வேண்டிய கோப்புகளை ஏற்றி கோப்புகளை ஏற்றி அந்தக் கோப்புகளில் வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டறிந்துகொள்ள முடியும்.
பல்வேறுப்பட்ட Antivirus மென்பொருள் கொண்டு உங்கள் கோப்புகளை உடனடியாக சோதனை செய்து தருகிறது இத்தளம்.
தளத்திற்குச் செல்ல சுட்டி: VIRUSTOTAL

எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள - HTML Tags ( Part-1)
எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள - HTML Tags ( Part-1)
வணக்கம்
நண்பர்களே..!
கடந்த இடுகையில் HTML குறிஒட்டுகளில் இரண்டைப் பார்த்தோம்.
1. <H1></H1>..<H6></H6> வரையில் முடியும் தலைப்பு குறிஒட்டுகள்.
2. ஒரு ஆவணத்தின் முக்கியப் பகுதிகளைப் பிரித்துக்காட்ட <HR> என்ற குறிஒட்டைப் பார்த்தோம். இதற்கு முடிவுக் குறிஒட்டு(End Tag) இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்கிறேன்.
இன்றைய பாடத்திற்குவருவோம்.
HTML குறிஒட்டுகள்(HTML Tags) நிறைய இருக்கிறது. அவற்றில் முக்கியமானதாகக் கருதப்படும் ஒரு சிலவற்றைப் சுருக்கமாகவே பார்ப்போம்.
ஒரு வாக்கியத்தை அல்லது உரையை தடிமனாக காட்டவும்(Bold), சாய்வாக காட்டவும்(Italic), அந்த உரைக்கு அடிக்கோடு(Underline) மூன்று முக்கிய குறிஒட்டுகள்(Tags) இருக்கின்றன.
அவை:
உதாரணம்:
முக்கிய குறிப்பு: ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட உரைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குறி ஒட்டுகளை(Tags) பயன்படுத்த முடியும். உதாரணமாக ஒரே உரையைத் தடிமனாகவும், சாய்வாகவும் காட்டமுடியும். அதே உரைக்கு அடிக்கோடிடவும் முடியும்.
இவ்வாறு HTML-ல் இருக்கிற அனைத்து சிறப்புக் குறிஒட்டுகளையும் ஒரு உரைக்கு பயன்படுத்தமுடியும்.
இவற்றை ஒரு தனி HTML ஆவணமாக நோட்பேடில் எழுதிப் பாருங்கள்..
<HTML>
<BODY>
<B>THIS IS BOLD</B>
<I>THIS IS ITALIC</I>
<U>THIS IS UNDERLINE</U>
<B><I>THIS IS BOLD AND ITALIC</B></I>
</BODY>
</HTML>
இதன்வெளிப்பாட்டை முந்தைய பதிவில் கூறியபடி உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற ஏதேனும் ஒரு வலை உலவியில்(internet browser) திறந்துப் பாருங்கள்.

- வாக்கியம் அல்லது வார்த்தையை தடிமனாக(Bold) காட்ட <B>மற்றும்</B> குறி ஒட்டுகள் பயன்படுகின்றது.
- வாக்கியம் அல்லது வார்த்தையை சாய்வாக(Italic) தடிமனாக காட்ட <I>மற்றும்</I> குறி ஒட்டுகள் பயன்படுகின்றது.
- வாக்கியம் அல்லது வார்த்தையை அடிக்கோடிட்டு காட்ட(Underline) <U>மற்றும்</U> குறி ஒட்டுகள் பயன்படுகின்றது.
உதாரணம்:
HTML Code
|
Browser
Display
|
This text is <b>bold</b>
|
This text is bold
|
This text is<i>italicized.</i>
|
This text
iitalicized.
|
This text is<u>underlined.</ul>
|
This text is
underlined.
|
முக்கிய குறிப்பு: ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட உரைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குறி ஒட்டுகளை(Tags) பயன்படுத்த முடியும். உதாரணமாக ஒரே உரையைத் தடிமனாகவும், சாய்வாகவும் காட்டமுடியும். அதே உரைக்கு அடிக்கோடிடவும் முடியும்.
இவ்வாறு HTML-ல் இருக்கிற அனைத்து சிறப்புக் குறிஒட்டுகளையும் ஒரு உரைக்கு பயன்படுத்தமுடியும்.
<b><i><u>This is bold and italic and underline</b></i></u>
இதன் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.
This is bold and italic and underline
இவற்றை ஒரு தனி HTML ஆவணமாக நோட்பேடில் எழுதிப் பாருங்கள்..
<HTML>
<BODY>
<B>THIS IS BOLD</B>
<I>THIS IS ITALIC</I>
<U>THIS IS UNDERLINE</U>
<B><I>THIS IS BOLD AND ITALIC</B></I>
</BODY>
</HTML>
இதன்வெளிப்பாட்டை முந்தைய பதிவில் கூறியபடி உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற ஏதேனும் ஒரு வலை உலவியில்(internet browser) திறந்துப் பாருங்கள்.
தங்கம்பழனி thanks
.
c, c++, Php இயக்க பயன்படும் இணையதளம்
Labels: technology, useful sites, தொழில்நுட்பம், பயனுள்ள இணையதளம்
வணக்கம் நண்பர்களே..!
கணினி மொழிகளைக் கற்றுத் தேர்ந்து, அதில் புரோகிராம் எழுத நினைப்பவர்களுக்கு பெரும் தடையாக வந்தமைவது அவற்றை இயக்கிப் பார்ப்பதற்கான மென்பொருள் இல்லாததுதான்.
உதாரணமாக PHP எழுதி நிரல்களை இயக்கிப்ப்பார்ப்பதற்கு அதற்குரிய மென்பொருள் நம் கணினியில் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். அவ்வாறில்லாமல் இணையத்தைப் பயன்படுத்தி நிரல்களை எழுதி சோதனை செய்ய இந்த தளம் உங்களுக்குப் பயன்படும்.
உங்கள் கணினி மட்டுமல்லாமல், நீங்கள் இணையத்தைப் பயன்படுத்திவரும் எந்த ஒரு கணனியிலும் மென்பொருள்கள் இல்லாமலே C, C++, PHP போன்றவைகளில் புரோகிராம் எழுதி அவற்றை இயக்கிப் பார்க்க முடியும்.
இதற்கு உதவும் தளம் http://codepad.org
இந்த தளத்திற்கு சென்று இதில் உள்ள ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்துகொண்டு நீங்கள் நிரல்வரிகளை தட்டச்சிட்டு சப்மிட் என்ற பொத்தானை அமுக்குவதன் மூலம் உங்கள் நிரல்வரிகளுக்குரிய முடிவுகளைப் பெறலாம்.
C, C++, PHP மட்டுமல்ல... C
C++
D
Haskell
Lua
OCaml
PHP
Perl
Plain Text
Python
Ruby
Scheme
Tcl ஆகிய மொழிகளை இதில் உள்ளிட்டு உங்கள் கற்கும் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
எந்த ஒரு மென்பொருள் கணனியில் நிறுவாமலேயே இந்த சேவையை இலவசமாக நாம் பெற முடியும் என்பதுதான் இத்தளத்தின் சிறப்பு. இந்த தகவல் கணினி மொழி கற்பவர்களுக்கும், கற்றுத் தேர்ந்தவர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கு இப்பதிவை பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி நண்பர்களே.!
c, c++, Php இயக்க பயன்படும் இணையதளம்
online compiler-interpreter

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)