பிளாக்கர் பதிவில் பேஸ்புக் Like Button கொண்டு வர
பேஸ்புக் கூகுளுக்கு இணையாக வளர்ந்து வரும் சமூக இணைய
தளமாகும். இதில் பல எண்ணற்ற வசதிகள் உள்ளன அதில் ஒன்று தான் இந்த LIKE BUTTON இந்த
பட்டனை எப்படி நம் பிளாக்கர் பதிவில் கொண்டு வருவது என்று காண்போம். இதை நம்
பதிவில் கொண்டு வருவதால் நம் பிளாக்கை மேலும் பிரபலபடுத்த முடியும். முக்கிய மான
விஷயம் இந்த பட்டனை கொண்டு வர நீங்கள் பேஸ்புக்கில் உறுப்பினர் ஆகவேண்டிய அவசியம்
இல்லை. யார் வேண்டுமானாலும் வைத்துகொள்ளலாம்.
- இதற்க்கு முதலில் Facebook Like Button இந்த லிங்கில் க்ளிக் செய்து பேஸ்புக் தள பக்கத்தை திறந்து கொள்ளவும்.
- அதில் மூன்று வகையான LIKE பட்டன் இருக்கும் அதில் நீங்கள் விரும்பிய பட்டனை தேர்வு செய்து மற்றும் அதில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப உங்களின் LIKE BUTTON வடிவமைத்து கொண்டு கீழே உள்ள GET CODE என்ற பட்டனை அழுத்தவும்.
- GET CODE பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கோடிங் இரண்டு வகையாக வரும் ஒன்று IFRAME, XFBML என்ற இருவகைகளில் நீங்கள் XFBML என்பதில் இருக்கும் கோடிங்கை காப்பி செய்து கொள்ளவும்.
- காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து பின்வரும் கோடிங்கை கண்டு பிடிக்கவும்.
<data:post.body/>
- இந்த வரியை கண்டுபிடிக்கவும். சுலபமாக கண்டறிய கீபோர்டில் CTRL+F அழுத்தி வரும் விண்டோவில் இந்த கோடிங்கை கொடுத்தால் சுலபமாக கண்டறியலாம்.
- இப்பொழுது நீங்கள் காப்பி செய்து வைத்திருந்த LIKE BUTTON கோடிங்கை இந்த வரிக்கு கீழே பேஸ்ட் செய்யவும்.
- LIKE BUTTON உங்கள் பதிவின் தலைப்பிற்கு மேலே வரவேண்டும் என நினைத்தால் கண்டுபிடித்த வரிக்கு மேலே உங்கள் கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
- அவ்வளவு தான் பேஸ்புக்கின் LIKE BUTTON உங்கள் பதிவில் சேர்ந்து விடும்.
டுடே லொள்ளு
நாங்கெல்லாம் வீரப்பன் பரம்பரையாக்கும்
வச்சகுறி தப்பாது மாமு.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |